திரைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த நண்பர் ரஜினிக்கு வாழ்த்து கூறிய கமல்..!!
திரைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள ரஜினிகாந்துக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1975ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அதன்பிறகு ஏராளமான திரைப்படங்கள், வித்தியாசமான கதாப்பாத்திரங்கள் என தொடர்ந்து 50 ஆண்டுகளாக சினிமாவில் உச்சநட்சத்திரமாக கோலோச்சி வருகிறார். சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினி, தனது 171வது படமான ‘கூலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படம் நாளை (ஆக 14) உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ரஜினிகாந்துக்கு , அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் கமல்ஹாசன், “திரைத்துறையில் அரை நூற்றாண்டு கால திறமையைக் குறிக்கும் வகையில், என் அன்பு நண்பர் ரஜினிகாந்த் இன்று சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவை கொண்டாடுகிறார். நமது சூப்பர் ஸ்டாரை பாசத்துடனும் பாராட்டுடனும் கொண்டாடுகிறேன், மேலும் இந்தப் பொன் விழாவிற்கு ஏற்றவாறு கூலி திரைப்படம் உலகளாவிய வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளார் கலாநிதி மாறன் , இசையமைப்பாளர் அனிரூத், நடிகர்கள் சத்யராஜ், நாகார்ஜுனா, அமீர்கான், உபேந்திரா, சௌபின் சாஹிர் ஆக்யோரையும் குறிப்பிட்டு வாழ்த்து கூறியுள்ளார். குறிப்பாக என் செல்ல மகள் ஸ்ருதி ஹாசன் தொடர்ந்து பிரகாசிக்கட்டும் என்று கூறியுள்ளார்.