விஜய்க்கு ஆதரவாகக் களம் இறங்கிய கமல்! 'ஜனநாயகன்' ரிலீஸ் தள்ளிப்போன சூழலில் கமல்ஹாசன் கருத்து..!
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், அந்த வழக்கு வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த சூழலில், வழக்கு தள்ளிப்போனதால் அவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தணிக்கைச் சான்றிதழ் விவகாரம் தொடர்பாகி கமல்ஹாசன் எம்.பி வெளியிட்டுள்ள பதிவில்,
ஆக்கப்பூர்வமான உரையாடலில் ஈடுபடுவதற்கான தருணம் இது. முழு திரைப்படத் துறையும் ஒன்றிணைந்து அரசாங்க தணிக்கைத் துறையுடன் அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபட வேண்டும்.சினிமா என்பது ஒரு சூழல் அமைப்பின் கூட்டு முயற்சியாகும். இத்தகைய சீர்திருத்தங்கள் படைப்புச் சுதந்திரத்தை பாதுகாக்கும்.
வெளிப்படத்தன்மைக்கும் மரியாதைக்கும் ரசிகர்கள் தகுதியானவர்கள். வெட்டுக்கான எழுத்துப்பூர்வ விளக்கம், காரணம், சான்றிதழ் வழங்கும் விவகாரங்களில் வெளிப்படத்தன்மை அவசியம்.
சினிமா என்பது ஒருதனிமனிதனின் உழைப்பு மட்டுமல்ல. சிறு வணிகங்கள் அடங்கிய கூட்டுக் குழுவின் கூட்டு முயற்சியாகும்.இந்திய சினிமா ரசிகர்கள் பகுத்தறிவும் முதிர்ச்சியும் கொண்டவர்கள். என தெரிவித்துள்ளார்.