☰
×

#BREAKING ஜாமின் கோரி கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மனு

 

ஜாமின் கோரி கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மனு அளித்துள்ளார். 

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும், முறையற்ற வகையில் நடந்து கொண்டதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) மாலை கைது செய்யப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரிஷ்டி சிங் தலைமையிலான குழுவினர், சென்னை நிர்வாகப் பிரிவு காவல்துறைத் தலைவர் காமினி மேற்பார்வையில் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி நவம்பர் 23-ஆம் தேதி தலைமைச் செயலாளரிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் (POSH) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


இந்நிலையில் ஆட்சியாருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய புகாரில் கைதாகி கடலூர் மத்திய சிறையில் உள்ள தவெக எம். எல். ஏ அருள் விக்னேஷ் ஜாமீன் கோரி கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து அரசு பதிலளிக்க ஆணையிட்டுள்ள நிலையில், இந்த மனு மீதான விசாரணை டிசம்பர் 1 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.