☰
×

#BREAKING கள்ளக்குறிச்சி விவகாரம்- விசாரணை குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு

 

கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக பெண் ஐஏஎஸ் அதிகாரி அளித்த புகார் குறித்து வி தமிழக அரசு குழு அமைத்துள்ளது. 


பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின் கீழ், (POSH Act) கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான பாலியல் புகாரை விசாரிக்க குழு அமைத்து தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் காகர்லா உஷா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில், அரசுத்துறை செயலாளர்கள் எஸ். மதுமதி, பி. சுமதி மற்றும் சுனிதா ஜ ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். 60 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க குழு முயற்சிக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழக காவல்துறை விசாரணையும் தனியாக நடப்பது குறிப்பிடத்தக்கது