தீபாவளிக்கு முன்பாக கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்கப்பட வாய்ப்பு
தீபாவளிக்கு முன்பாக கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக சென்னை கோட்ட ரயில்வே கூடுதல் மேலாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை கோட்ட ரயில்வே கூடுதல் மேலாளர் செந்தில்குமார் கூறுகையில், “கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் வரும் தீபாவளிக்கு முன் திறக்கப்பட வாய்ப்புள்ளது. கிளாம்பாக்கத்தின் நடைமேடை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. 3 நடைமேடைகளுடன் ரயில் நிலையம் கட்டும் பணிகள் மற்றும் தண்டவாள பணிகள் நிறைவடைந்துவிட்டது.
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை, பேருந்து நிலையத்துடன் இணைக்கக்கூடிய ஆகாய நடைமேடை பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிதாக அத்திப்பட்டு - கும்மிடிப்பூண்டி இடையே 3, 4 வது வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே 2வது வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. தாம்பரம் - செங்கல்பட்டு 4வது வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் மின்சார ரயில்கள் இயக்க வழிவகை என்ன என்பது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்” என்றார்.