கலைஞர் மகளிர் உரிமைத் தொகை - விண்ணப்பிக்க விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. முதற்கட்ட முகாம்கள் ஜுலை 24 தேதி முதல் ஆகஸ்ட் 04 தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 05 தேதி முதல் 14 தேதி வரை நடைபெற்றது. இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.விதிவிலக்கு அளிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள தகுதிவாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கனவே முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகைபுரிய இயலாத குடும்பத் தலைவிகள் விண்ணப்பங்கள் பதிவு செய்ய, இன்று, நாளை மற்றும் 20 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.