×

மதுரையில் கலைஞர் நூலகம்- ரூ.116 கோடி நிதி ஒதுக்கீடு

 

மதுரையில் சர்வதேச அளவில் கலைஞர் நினைவு நூலகம் அமைத்திட ரூ.99 கோடி, தொழில் நுட்ப சாதனங்கள், தளவாடப்பொருட்கள்,  மற்றும் நூல்கள் வாங்கிட ரூ.15கோடி மொத்தம் 116 கோடி நிதி ஒதுக்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

ஜூன் மூன்றாம் தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு சர்வதேச தரத்தில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.இந்த அறிவிப்பை அடுத்து மதுரையில் நூலகத்துக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

புதுநத்தம் ரோட்டில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகத்தில் கலைஞர் நினைவு நூலகம் அமைய உள்ளது. ரூ.2 லட்சம் சதுர அடி பரப்பளவில் நூலகம் அமைக்க விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. தேவையான நூல்கள், மின் நூல்கள், இணைய வழி பருவ இதழ்கள், ஆராய்ச்சி இதழ்கள் கொள்முதல் செய்ய ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நூலகத்துக்கு தேவையான தொழில்நுட்ப சாதனங்கள் வாங்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.