கலைஞர் கருணாநிதி போல் இறங்கிட்டாரே... கல்லக்குடி ரயில் தண்டவாளத்தில் திடீரென தலை வைத்து படுத்த மன்சூர் அலிகான்!
லால்குடி தொகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கல்லக்குடி ரயில் நிலையத்தில் இன்று காலை மன்சூர் அலிகான் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது தண்டவாளத்தில் இறங்கிய மன்சூர் அலிகான், குறுக்கே படுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீஸார் பதறி போய் என்னவென கேட்க, "எனக்கு கருணாநிதி நினைவு வந்துவிட்டது. அதனால் இந்த தண்டவாளத்தில் படுத்தேன்" என்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்லக்குடி ரயில் மறியல் போராட்டம் 1953 ஆம் ஆண்டு நடந்தது. கருணாநிதியால் முன்னெடுக்கப்பட்ட முக்கிய போராட்டமாகும். இந்த ரயில் நிலையத்திற்கு டால்மியாபுரம் ரயில் நிலையம் என பெயர் மாற்றத்தை கண்டித்தும் கல்லக்குடி என மாற்றக் கோரியும் கருணாநிதி போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்சூர் அலிகான் 1999 முதல் 4 முறை மக்களவைத் தேர்தலிலும், ஒரு முறை சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
1999 - பெரியகுளம் தொகுதி: புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிட்டார். இதில் 1.3 லட்சம் வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.
2009 - திருச்சிராப்பள்ளி தொகுதி: சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார்.
2019 - திண்டுக்கல் தொகுதி: நாம் தமிழர் கட்சி (NTK) சார்பில் போட்டியிட்டு 54,957 வாக்குகள் பெற்றார்.
2024 - வேலூர் தொகுதி: தனது சொந்தக் கட்சியான 'இந்திய ஜனநாயகப் புலிகள்' சார்பாகப் போட்டியிட முயன்றார், ஆனால் இறுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். இத்தேர்தலில் அவர் 2,804 வாக்குகளை மட்டுமே பெற்றார்.