×

“அன்புமணியும் ராமதாஸும் வெளியே நாடகம்போடுகின்றனர்... வீட்டுக்குள்ளே கேக் வெட்டி கொண்டாட்டம்”- காடுவெட்டு குரு மகள் குற்றச்சாட்டு

 

காடுவெட்டி குருவை அன்புமணியும் ராமதாஸும் அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர் என காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை, “சுயலாபத்துக்காகதான் பாமக-வை அன்புமணியும் ராமதாஸும் நடத்துகின்றனர். இருவரும் வெளியே நாடகம்போடும் அதே நேரத்தில், வீட்டுக்குள்ளே கேக் ஊட்டி கொள்கின்றனர். இன்னொருபக்கம், கீழே இருக்கும் பொறுப்பாளர்கள்தான் அடித்துக் கொள்கின்றனர். காடுவெட்டி குருவை அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துகின்றனர். வருகின்ற தேர்தலில் வன்னிய சமுதாயம் எடப்பாடிக்கு எதிராக செயல்படும். எடப்பாடி பழனிசாமி, தான் பேசியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் தக்க பாடத்தை கற்று கொடுப்போம். 

தங்கள் அரசியலுக்காக என் அப்பா காடுவெட்டி குருவை பாமகவில் பயன்படுத்தி வருகிறார்கள். ராமதாஸ் தன் மகளையும், அன்புமணி தன் மனைவியையும் அரசியலுக்குள் கொண்டு வந்துள்ளனர். பொதுப் பிரச்னைகள் பற்றி பேசாமல் இருவருக்கு இடையேயான பிரச்னையையே முதன்மை படுத்துகின்றனர். வன்னியர் சமுதாயத்திற்கு ராமதாஸூம், அன்புமணியும் எதுவும் செய்யவில்லை. ராமதாஸ்க்கும், அன்புமணிக்கும் இரண்டு பேருக்குமே பதவி வெறி மட்டும் தான் உள்ளது. எங்கள் சமுதாயத்தை வளர்க்க வேண்டும் என்ற அக்கறை இல்லை. வன்னியர் சமூகத்திற்கு உண்மையிலேயே நல்வினை செய்தவர்களை இகழ்ந்து பேசுகிறீர்கள்; ஆனால் எதையும் செய்யாதவர்களைப் பெருமைப்படுத்துகிறீர்கள்” என்றார்.