×

ஆளுநர் தேசிய கீதத்தை எப்போது மாற்றப்போகிறார்?- கி.வீரமணி

 

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “ தேசிய கீதத்தில் "திராவிட உத்கல வங்கா" என்ற வார்த்தை பிரிவினை வாதமா,  திராவிடம் என்பதை பற்றி அவருக்கு அறவே தெரியவில்லை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை பேசி கொண்டு இருந்தார் என நினைத்தோம் ஆனால் அவர் உளருகிறார், பிதற்றுகிறார் என்பது தற்போதுதான் தெரிகிறது. ஆளுநர் தேசிய கீதத்தை எப்போது மாற்றப்போகிறார்?

மேலும் இதற்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரிவினையை உண்டாக்கியது மனு தர்மமா அல்லது திராவிடமா என கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா என்பதை வெளியில் இருந்து வந்தவர்கள் உருவாக்கியவர் என்பது தான் வரலாறு. சனாதனத்தை அடிக்கடி பேசும் ஆளுநர், காசி பல்கலைக்கழகத்தில் பி.ஏ.பாடத்தில் ஆர்ய வர்தம் என்பதை முதன் முதலில் கொண்டு வந்தது யார்? மேலும் மனு தர்மர் 10 வது அத்தியாவதத்தில் ஆர்யம் குறித்து உள்ளது 

மக்களின் வரிப்பண பதவியில் இருந்து கொண்டிருக்கும் ஆளுநர் பேசாமல், ராஜினாமா செய்து விட்டு பாஜக அலுவலகத்திற்கே சென்று பேசட்டும். இந்திய தேசிய கீதம் திராவிட உத்கல பங்கா என்ற வார்த்தை பிரிவினையை உச்சரிக்கிறா அல்லது ஒற்றுமையை உச்சரிக்கிறதா என்பதை தமிழக ஆளுநர் விளக்க வேண்டும்” என தெரிவித்தார்.