மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து!
Aug 18, 2023, 11:00 IST
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். இந்தியப் பொருளாதாரத்தை புதிய உயரத்துக்குக் கொண்டு செல்வதற்கும், நமது இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உறுதி செய்வதற்கும் அவர் விதிவிலக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தேச சேவையில் அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமாக வாழ பிரார்த்திக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.