தமிழ்நாடு SC/ST ஆணைய தலைவராக நீதிபதி முரளிதரன் நியமனம்
தமிழகத்தில் நீண்ட நாட்களாக காலியாக இருந்த மிக முக்கியமான பதவியான தமிழ்நாடு பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் பதவிக்கு தவெக அரசு புதிய நியமனம் செய்து அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே தலைவராக இருந்த நீதிபதி தமிழ்வாணன் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பே கடந்த 22.03.2026 அன்று இயற்கை எய்தியதால், தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்த காலியிடத்தை நிரப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அரசு கவனமாக பரிசீலித்த பிறகு, சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான முரளிதரனை தமிழ்நாடு பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. அவரது பதவிக்காலம் பொறுப்பேற்ற நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் அல்லது 75 வயது வரை, இதில் எது முன்னதாக வருகிறதோ அது வரை நீடிக்கும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.