☰
×

24 வயதில் காலை இழந்த இளைஞனின் கண்ணீருக்குக் கிடைத்த நீதி; தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.35.68 லட்சம் அபராதம்!

 

திருப்பூர் மாவட்டம், மருள்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தினேஷ்குமார் (வயது 24). இவர் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காலில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து சிகிச்சைக்காக உடுமலையில் உள்ள கோகுல் பாலிகிளினிக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ஆஸ்பத்திரியில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையின் காரணமாக, தினேஷ்குமாரின் காலில் தொற்று ஏற்பட்டு நிலைமை மிகவும் மோசமடைந்தது. உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டதால், கடந்த நவம்பர் 30, 2023 அன்று அறுவை சிகிச்சை மூலம் அவரது இடது கால் முட்டிக்குக் கீழே அகற்றப்பட்டது.

ஆஸ்பத்திரியின் அலட்சியத்தாலும் தவறான சிகிச்சையாலும் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகக் கூறி, தினேஷ்குமார் தரப்பில் திருப்பூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம், ஆஸ்பத்திரியின் சேவைக் குறைபாடு மற்றும் தவறான சிகிச்சையை உறுதி செய்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட இளைஞர் தினேஷ்குமாருக்கு கோகுல் பாலிகிளினிக் ஆஸ்பத்திரி நிர்வாகம் ரூ.35,68,313 (சுமார் ரூ.35.68 லட்சம்) இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.