#JUST IN : wetheleader.org மூலம் பதிவு செய்து என்னுடன் இணையலாம் - அண்ணாமலை..!
பா.ஜ.க. அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார் அண்ணாமலை. பா.ஜ.க மீது அதிருப்தியில் இருந்த அண்ணாமலை சமீபத்தில் நிதின் நபின், அமித் ஷாவை டெல்லியில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இந்நிலையில் அவர் சற்று முன் நேரலையில் பேசினார்.
அனைவரும் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். புதிய பாதை, புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.ஐஐஎம்மில் படித்து கொண்டிருந்த போது கேப்டன் விஜயகாந்த் நடத்தி வந்த தேமுதிகவில் மூன்று மாதங்கள் Internship படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுதான் அரசியலை அருகில் இருந்து பார்க்க முதல் வாய்ப்பு.
2020ஆம் ஆண்டு தனது கட்சியில் இணைய நடிகர் ரஜினி அழைப்பு விடுத்தார். பி.எல். சந்தோஷிடம் வாக்குறுதி அளித்ததால் ரஜினி அழைப்பை ஏற்கவில்லை. சென்னை திரும்பியதும் ரஜினியை சந்தித்து மன்னிப்பு கோரினேன். பாஜகவில் இருந்தாலும் தமிழ்நாட்டு உணர்வுகளை என்றுமே விட்டுக் கொடுத்ததில்லை என்று அண்ணாமலை கூறி உள்ளார்.
ஒரு புதிய அரசியலை, அடிப்படை கட்டமைப்பை மாற்றக் கூடிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பாஜகவில் இருந்து ராஜினாமா செய்தேன். நான் பெருமை மிகுந்த இந்தியன், பாரம்பரியத் தமிழன் என்ற அடையாளத்தோடு இயக்கத்தை தொடங்குகிறேன். பா.ஜ.கவில் இருந்த 6 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுத் தந்தது இல்லை. தமிழ்நாட்டின் அடையாளத்தோடு பாஜக இருக்க வேண்டும் என விரும்பினேன் என்று அண்ணாமலை கூறினார்.
தமிழ்நாட்டில் அடுத்து நடக்க உள்ள தேர்தலில் நமது அரசியல் கட்சி போட்டியிடும். பா.ஜ.க உடன் கடந்த 18 மாதங்களாக கருத்து வேறுபாடு நீடித்தது. கடந்த டிசம்பர் 4ம் தேதியே பாஜகவில் இருந்து விலகுவதை தெரிவித்துவிட்டேன். எனது கருத்துக்கு பா.ஜ.க தலைமை செவிசாய்க்கவில்லை. எதிர்காலத்தை நோக்கி பயணப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது.தற்போது சரியான தருணம் வந்துள்ளது என்று பாஜகவில் இருந்து விலகிய நிலையில் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முடித்து விட்டு செல்லுமாறு கட்சி மேலிடம் அறிவுறுத்தியது. அதற்கேற்ப தேர்தல் வேலைகளை செய்து விட்டு வெளியேறியிருக்கிறேன்.
தனி நபர் துதிபாடும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எந்த ஒரு நாற்காலியும் யாருக்கும் நிரந்தரம் இல்லை. அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும். நிரந்தர எம்.எல்.ஏ, நிரந்தர அமைச்சர், நிரந்தர தலைவர் என யாரும் கிடையாது. புதிதாக வருபவர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்படும்.கோவையில் அப்துல் கலாம் பெயரில் பயிற்சி மையம் தொடங்கப்படும். இதில் புதிதாக நம்முடன் இணைபவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படும். வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
www.wetheleader.org என்ற இணையதளத்தில் அரசியல் ஆர்வம் உள்ளவர்கள் இணையலாம். இணைபவர்களுக்கு அரசியல் பயிற்சி வழங்கப்படும். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பெயரில் அரசியல் பயிற்சி வழங்கப்படும்.இன்றிலிருந்து நாம் செல்லக் கூடிய பாதை மக்களுக்கான பாதை.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு செங்கல்லையும் எடுத்து வைக்கும் போது, அதனை நேர்மையாக எடுத்து வைக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்கு இங்கிருந்து நல்ல தலைவர்களை அனுப்புவோம். யார் மீதும் வன்மம் கிடையாது. மாற்றத்தை கொடுக்கக் கூடியது தான் சமூக வலைதளத்தின் வேலை. சமூக வலைதளத்தில் நாம் அதிக பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். பாஜகவில் இருந்த போதே மும்மொழி கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்தேன்.
நாகரிகமான அரசியலை முன்னெடுப்பேன். நிச்சயமாக நாம் எல்லோரும் சேர்ந்து முன்னேறி செல்வோம். சாமானிய மக்களுக்கான அரசியலை நாம் முன்னெடுப்போம். பாரத நாட்டில் தமிழ்நாட்டை முதன்மைப்படுத்துவதே முக்கிய நோக்கம். நம்முடைய இயக்கம் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும்.