×

#JUST IN : பள்ளிகள் திறப்பு தள்ளிபோகிறதா..? அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி..! 

 

சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;


தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன்1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடுமையான வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என சில கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஜூன் முதல் வாரத்தில் வெப்ப அலை இருக்குமா? அல்லது பருவமழை தொடங்குமா? என வானிலை துறையிடம் தகவல் கேட்டுள்ளோம்.

வானிலை அறிவிப்பு வெளியான பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து முதல்-அமைச்சர் விஜய்யிடம் ஆலோசிக்கப்படும். அதன் பின்னர் பள்ளி திறப்பு தேதி அறிவிக்கப்படும். பள்ளிகளில் காலை உணவு, மதிய உணவு திட்டங்கள் வழக்கம்போல தொடரும்.


இவ்வாறு அவர் கூறினார்.