×

#JUST IN : டாஸ்மாக் புகார்களை அளிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு..!

 

டாஸ்மாக் கடையில் கூடுதல் தொகை உள்ளிட்ட புகார்களை அளிக்க வாட்ஸ்அப் எண் 7397720230 அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மதுபானம் மற்றும் பிற புகார்கள், கட்டணம் தொடர்பாக 1800 889 2015 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே போல், @Tasmacoffical என்ற எக்ஸ் தள கணக்கிலும் புகார்களை பதிவு செய்யலாம். டாஸ்மாக் கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை மையம் நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டாஸ்மாக் கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை மையம் 24 மணி நேரமும் புகார்கள் மற்றும் தொடர்புகளைப் பெறும் எனவும் இனி எவ்வித சமரசமும் இன்றி துறை செயல்படும் எனவும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

டாஸ்மாக்- பொதுமக்கள்/ நுகர்வோர்களின் புகார்கள் மற்றும் குறைகள் - கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை மையம் மற்றும் அதிகாரப்பூர்வ சமூக ஊடகத் தளங்கள்

டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் சேவைகள் தொடர்பான பொதுமக்கள்/நுகர்வோர்கள் தங்களது புகார்கள், குறைகள் மற்றும் இதர பிரச்சினைகளை எளிதாகத் தெரிவிக்கும் வகையில், டாஸ்மாக் கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை மையம் 31.08.2026 முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பொதுமக்கள்/நுகர்வோர்கள் தங்களது புகார்கள், குறைகள் மற்றும் விசாரணைகளைத் தெரிவிப்பதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800-889-2015 அதிகாரப்பூர்வ WhatsApp எண் +91-7397720230 ஆகியவற்றைத் தொடர்புகொள்ளலாம்.

கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை மையம் 24 மணி நேரமும் (24X 7) பொதுமக்கள்/நுகர்வோர்களிடமிருந்து புகார்கள் மற்றும் தொடர்புகளைப் பெறும்.

மேலும், டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகளை பின்வரும் இணைப்புகள் மூலம் அணுகலாம்:

Facebook: TASMAC Official

X ( Twitter): @TasmacOfficial

Instagram: @tasmac_official

YouTube: TASMAC Official

மேற்கண்ட கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை, WhatsApp மற்றும் அதிகாரப்பூர்வ சமூக ஊடகத் தளங்கள் மூலம் பொதுமக்கள்/நுகர்வோர்கள் தங்களது புகார்கள் மற்றும் குறைகளை டாஸ்மாக் நிறுவனத்திடம் எளிதாகத் தெரிவிக்க இயலும்.