×

#JUST IN : அரசுக்கு என்ன சம்பந்தம்..! விஜய்க்கு மா.சுப்ரமணியன் பதில்..! 

 

தவெக தலைவர் விஜய், இன்று பெரம்பூர் பேருந்து நிறுத்தம் அருகே பிரசாரத்திற்கு திட்டமிட்டிருந்த நிலையில், தவெக தேர்வு செய்த இடம் அசம்பாவிதத்துக்கு வழிவகுக்கும் என்று கூறி காவல்துறை அனுமதி மறுத்தது. வேறு இடத்தைத் தேர்வு செய்து காவல்துறையிடம் அனுமதி பெறுமாறு தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், பெரம்பூர் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு திமுக அரசுதான் காரணம் என்று விஜய் கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார்.
இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், 

தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி பெறுவது எப்படி என்பதை விஜய் தெரிந்து கொள்ள வேண்டும்.அனுமதி கோரி தேர்தல் ஆணையத்திற்கோ, காவல்துறைக்கோ கடிதம் அளிக்க வேண்டாம். 48 மணி நேரத்திற்கு முன்னர் இணைய வழியாக விண்ணப்பித்தால் போதுமானது முறையாக விண்ணப்பிப்பவர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்து வருகிறது 

அவ்வாறு முறையாக இணையம் வாயிலாக விண்ணப்பிப்பவர்களுக்குத் தேர்தல் ஆணையம் உரிய அனுமதியை வழங்கி வருவதாகவும், விதிகளைப் பின்பற்றி அனுமதி பெறுவது எப்படி என்பதை விஜய் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.