#JUST IN : ‘Cheap Politics’ செய்ய விரும்பவில்லை. துளிகூட அரசியல் செய்யும் எண்ணம் இல்லை - உதயநிதிக்கு முதல்வர் விஜய் பதில்!
தமிழக சட்டசபையின் 3-வது நாளான இன்று பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியுள்ள நிலையில், காவிரி பிரச்னையை கையில் எடுத்த தி.மு.க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது.சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. ஆனால் தமிழக அரசு காவிரி விவகாரத்தில் இதுவரை என்ன செய்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரியில் தண்ணீர் வரவில்லை, குறுவை சாகுபடி மொத்தமாக இல்லாமல் போய்விட்டது.விவசாயிகள் பிரச்சனைக்கு சரியான தீர்வு தேவை, குறுவை சாகுபடி இல்லாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு என்ன நிவாரணம் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.
காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு மேகதாது அணை கட்ட கர்நாடக அதி தீவிரம் காட்டுகிறது.மேகதாது அணை கட்ட கடந்த வாரம் பெங்களூருவில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. மேகதாது அணை கட்ட டெல்லியில் ஆய்வுக்கூட்டம் நடத்தியுள்ளார் டிகே சிவக்குமார் என்று கூறிப்பிட்டார். விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியிருக்க வேண்டும் என்றார்.
காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதில் தயக்கம் ஏன் என் உதயநிதி கேள்வி எழுப்பினார். மேலும் அனைத்து கட்சி எம்பிக்களுடன் பிரதமர் மோடியை சென்று சந்திக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
இந்த அரசு ஒரு ஸ்டேட்டஜியை கையால்கிறது. ஒரு செயலை செய்யும் முன் அதை வெளியில் பரப்புகிறது என்று சொல்ல, இது இங்கு தேவையில்லாத விஷயம் என்று சபாநாயகர் ஆட்சேபம் தெரிவித்தார். மேலும் நீங்கள் கொடுத்த கவன ஈர்ப்பு முடிவுக்கு வந்துவிட்டது. அதனால் இதை பற்றி பேச அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
முதல்வர் கர்நாடகா செல்வதாக வேளாண்துறை அமைச்சர் பேட்டியில் சொன்னார். ஆனால் இது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் எட்டவில்லை என்று அமைச்சர்கள் சொன்னார்கள். நாங்கள் தண்ணீர் வழங்க முடியாது, தமிழக முதல்வர் இங்கு வர வேண்டாம் என்று கர்நாடக முதல்வர் சொல்கிறார். தமிழக முதல்வர் கர்நாடகா செல்ல இருந்தாரா? அப்படி என்றால் ஏன் செல்லவில்லை? இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்
அதனை தொடர்ந்து காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.காவிரி விவகாரத்தில் துளியும் அரசியல் செய்யும் எண்ணம் இல்லை. மேகதாது அணை குறித்து நாம் அனைவரும் தீர்மானம் நிறைவேற்றினோம். அதை கடிதமாக பிரதமருக்கு அனுப்பியுள்ளோம். காவிரியில் நமது உரிமையை அரசு விட்டுத்தராது. பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும் என்று தான கர்நாடகா செல்ல திட்டமிட்டோம். அங்கு ஏதேனும் அவமானம் நேர்ந்திருந்தால் கூட தமிழக மக்களுக்காக அதை ஏற்றுக்கொள்ள நான் தயார் என்று பதில் அளித்துள்ளார்.
மேலும், “காவிரி விவகாரத்தில் மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் முழு உண்மையையும் வெளியிடவில்லை. 1969-ல் கர்நாடகாவுக்கு காவிரியில் அணை கட்ட அனுமதித்தது யார்? என ‘Cheap Politics’ செய்ய விரும்பவில்லை. துளிகூட அரசியல் செய்யும் எண்ணம் இல்லை. காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண பெங்களூரு செல்ல விரும்பினேன்” என்றார்.