×

#ELECTION BREAKING: திமுகவுடன் பேரம் பேசும் கட்சியாக நாங்கள் இருக்க மாட்டோம்- விசிக தலைவர் திருமாவளவன்..!!

 

கடந்த பிப்ரவரி 23 -ஆம் தேதி திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது. டி.ஆர் பாலு தலைமையிலான குழு. இந்த குழு இன்றைய தினம் விசிக உடன் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையை நடத்தியது. ஏற்கனவே காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, ஐ.யு.எம்.எல் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் சூழலில் இன்றைய தினம் விசிகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

 

விசிக கடந்த முறை ஆறு இடங்களில் போட்டியிட்டு நான்கு இடங்களை வென்றது. இம்முறை அதிக அளவிலான தொகுதிகளை கேட்போம் என ஏற்கனவே திருமாவளவன் சொல்லியிருந்தாலும் அழுத்தம் கொடுக்க மாட்டோம் எனவும் குறிப்பிட்டு இருந்தார் இந்த சூழலில் தான் விசிக - திமுக இடையே நடைபெறும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை கவனம் பெற்று வருகிறது.

 

இந்நிலையில் இந்தமுறை 12 தொகுதிகளை விசிக பேரம் பேசுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக உடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “நடக்கவிருப்பது வழக்கமான, சராசரியான தேர்தல் அல்ல. வலதுசாரி கட்சிகளை காலூன்ற விடக்கூடாது என்பதற்கான தேர்தலாக இது நடக்கவுள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும் தொகுதி பங்கீடு குறித்து பேசிய அவர், “திமுகவுடன் பேரம் பேசும் கட்சியாக நாங்கள் இருக்க மாட்டோம். தொகுதிப் பங்கீடு எங்கள் வலிமைக்கு ஏற்ப அமைய வேண்டும் என தெரியப்படுத்தினோம். எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து திமுகவிடம் பேசவில்லை, எண்ணிக்கை முடிவானபிறகே தொகுதிகளின் நிலவரம் குறித்து முழுமையாக தெரியவரும்”

விசிகவுக்கான அதிகாரப் பகிர்வு பற்றி திமுக குழுவினரிடம் எடுத்துரைத்தோம்; எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து நாங்கள் திமுகவிடம் பேசவில்லை.

புதுச்சேரியிலும் போட்டியிட திமுகவிடம் தொகுதிகளை கேட்டிருக்கிறோம்; மாநிலங்களவை சீட் கேட்கவில்லை.

எண்ணிக்கை முடிவானபிறகே தொகுதிகளின் நிலவரம் குறித்து முழுமையாக தெரியவரும் என தெரிவித்தார்.