×

#JUST IN :கரூர் சம்பவத்தில் 41 பேர் இறந்த நிலையில் குற்ற உணர்வின்றி நடனமாடுகிறார் விஜய்: ஜெயக்குமார்..!

 

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:


அதிமுகவை விமர்சிக்கும் விஜய் தனது சம்பளம் எவ்வளவு என வெளிப்படையாக கூறுவாரா? என ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். தவெகவினர் ஆபத்தில் உள்ளனர்; அதனால்தான் தங்களை காப்பாற்ற விசில் அடிக்கின்றனர்

கறுப்பு அதிகம், வெள்ளை குறைவு :
'விஜய் வாங்கும் சம்பளத்தில் "கறுப்பு" அதிகம்; "வெள்ளை" குறைவு. ஆதவ் அர்ஜூனாவின் லாட்டரி பணத்தில்தான் தான் தவெக கட்சியே நடக்கிறது.  யார் யாரையும் விமர்சனம் செய்ய வேண்டும் என்று விவஸ்த்தை இல்லை.

கரூர் சம்பவத்தில் 41 பேர் இறந்த நிலையில் குற்ற உணர்வின்றி நடனமாடுகிறார் விஜய்..விஜய் இப்படி மேடையில் நடனமாடியதால் கரூரில் இறந்த 41 பேரின் குடும்பம் எவ்வளவு வேதனைப்படும்' எனவும் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/lJMStSM1TkY?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/lJMStSM1TkY/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">