×

#JUST IN : ரீல்ஸ் போடவே இந்த ஆளுநர் உரை: உதயநிதி ஸ்டாலின் கிண்டல்.!

 

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரை குறித்து, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

ஆளுங்கட்சியினர் ரீல்ஸ் போடுவதற்கான கண்டெண்ட் மெட்டிரீயல்-ஆக இந்த ஆளுநர் உரை அமைந்துள்ளது. திமுக ஆட்சியில் அரசின் எந்த உரையையும் ஆளுநர் முழுவதுமாக படித்ததே இல்லை. பல திருத்தங்களை செய்வார்.இன்று தவெக அரசு தயாரித்த உரையை, ஒரு வரி கூட மாற்றாமல் படித்துள்ளார். இதிலிருந்தே தவெக - பாஜக இடையே இணக்கமான சூழல் உள்ளதோ என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய ஆளுநர் உரை என்பது மக்கள் நலனுக்கானது அல்ல; மாறாக தவெக மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோர் தம்பட்டம் அடித்துக் கொள்வதற்கும், ஆளுங்கட்சியினர் சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' போடுவதற்கான கன்டென்ட் மெட்டீரியலாகவுமே அமைந்துள்ளது.தவெக அரசு புதியதாக எதையும் செய்யவில்லை. முந்தைய எங்கள் திமுக அரசின் திட்டங்களையே மீண்டும் தங்களின் திட்டங்களாக மாற்றி அறிவித்துள்ளனர். மேலும், இந்த உரை மிகுந்த காழ்ப்புணர்ச்சியுடனே தயாரிக்கப்பட்டுள்ளது.


கடந்த திமுக ஆட்சிக்காலத்தில், தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த எந்த ஒரு உரையையும் ஆளுநர் முழுமையாகப் படித்ததே இல்லை; பல திருத்தங்களைச் செய்வார். ஆனால் இன்று, தவெக அரசு எழுதிக் கொடுத்த உரையை ஒரு வரி கூட மாற்றாமல் அப்படியே வாசித்துள்ளார். இதைப் பார்க்கும்போது தவெக மற்றும் பாஜக இடையே ரகசிய உடன்பாடும், இணக்கமான சூழலும் ஏற்பட்டுள்ளதோ என்ற பலத்த சந்தேகம் அனைவருக்கும் எழுகிறது.


எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்துள்ள இந்த "பாஜக கூட்டணி" குற்றச்சாட்டு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.