×

#JUST IN : அண்ணாமலை மீதான அவதூறு வழக்கை திடீரென வாபஸ் பெற்றார் டி.ஆர்.பாலு..!

 

தமிழக பாஜவில் இருந்த போது அண்ணாமலை 2023ல் 'டி.எம்.கே. பைல்ஸ்' என்ற பெயரில் , பலரின் சொத்து பட்டியலை வெளியிட்டார் . அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் திமுக பொருளாளரும், எம்பியுமான டி.ஆர்.பாலு சொத்து விபரங்கள் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.இதையடுத்து அண்ணாமலை மீது திமுக பொருளாளர் டிஆர் பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் அண்ணாமலை ஆஜராகி டி.ஆர். பாலுவிடம் குறுக்கு விசாரணை நடத்தினார். மறுமுறை வழக்கு வரும்போது, மீண்டும் பாலுவிடம் குறுக்கு விசாரணை செய்யப்போவதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார். இத்தகைய சூழ்நிலையில் வழக்கை பாலு வாபஸ் பெற்றுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணையின் போது, அண்ணாமலை நேரில் ஆஜராகி டி.ஆர்.பாலுவிடம் நேரடியாகக் குறுக்கு விசாரணை நடத்தியிருந்தார். இந்தச் சூழலில், அண்ணாமலைக்கு எதிராகத் தான் தொடர்ந்த அவதூறு வழக்கை டி.ஆர்.பாலு திடீரெனத் திரும்பப் பெற்றுள்ளார்.