×

#JUST IN : TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு..!

 

TNPSC குரூப் 2 ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் காத்துக்கொண்டுள்ளனர். தேர்வு பிப்ரவரி 8-ம் தேதி தொடங்கப்படவுள்ள நிலையில், தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

குரூப்-2, 2ஏ பதவிகளுக்கு முதன்மைத் தேர்வில் தமிழ் தகுதித்தாள் தேர்வு 2026 பிப்ரவரி 8ம் தேதி காலையிலும், அதே நாள் குரூப்-2ஏ பதவிகளுக்கான தாள்-2 (பொதுப்பாடம்) தேர்வு பிற்பகலிலும் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து, குரூப்-2 பதவிகளுக்கான தாள்-2 தேர்வு (பொதுப்பாடம்) பிப்ரவரி 22ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நேரடி நியமனத்திற்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் (குருப் 2 மற்றும் 2ஏ பணிகள்) அடங்கியுள்ள பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வின் முடிவுகள் 22.12.2025 அன்று வெளியிடப்பட்டது.

இப்பதவிகளுக்கான முதன்மை தேர்வு 8.2.2026 காலையில் குருப்-2 ஏ பணிகளுக்கும் (கொள்குறி வகை), 8.2.2026 மாலையில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு (விரிந்துரைக்கும் வகை) மற்றும் 22.2.2026 காலையில் குருப் -2 பணிகளுக்கும் (விரிந்துரைக்கும் வகை) நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக் கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவு தளத்தின் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட (Hall Ticket)அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

குரூப் 2 முதன்மைத் தேர்வு தேதிகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2,2ஏ முதன்மைத் தேர்வு 2 தாள்கள் கொண்டு நடைபெறும். குரூப் 2 பதவிகளுக்கு முதல் தாள் (தமிழ் தகுதித் தாள்) பிப்ரவரி 8-ம் தேதியும், இரண்டாம் தாள் (பொது அறிவு) பிப்ரவரி 22-ம் தேதி நடைபெறவுள்ளது.

குரூப் 2ஏ முதன்மைத் தேர்வின் முதல் மற்றும் இரண்டாம் தாள் இரண்டும் பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறவுள்ளது.

குரூப் 2 முதன்மைத் தேர்வு 2026 ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?

படி 1 : https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

படி 2 : ஹால் டிக்கெட் வெளியானதும், அதற்கான லிங்க் முகப்பு பக்கத்தில் இருக்கும் What's New என்ற இடத்தில் இடம்பெற்று இருக்கும்.

படி 3 : இல்லையென்றால், தேர்வுப் பலகை (Exam Dashboard) என்ற இடத்தில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய லிங்க் இடம்பெற்று இருக்கும்.

படி 4 : அதில் லாங்கின் விவரங்களை உள்ளிட்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தேர்வு மையத்திற்கு செல்லும் தேர்வர்கள் தேர்விற்கான ஹால் டிக்கெட், அசல் அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்துசெல்ல வேண்டும். ஹால் டிக்கெட்டில் இடம்பெற்றுள்ள வழிமுறைகளை பின்பற்றவும். தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்துசெல்வது, தேர்வில் முறைகேட்டில் ஈடுபடுவது ஆகியவை கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

முதன்மைத் தேர்வு முறை

குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கு தனித்தனியாக முதன்மைத் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2 பதவிகளுக்கு தமிழ் தகுதித் தாள் மற்றும் பொது அறிவு தாள் என 2 தாள்கள் உள்ளன. இரண்டுமே விரிவாக விடையளிக்கும் வகையில் நடைபெறும். தமிழ் தகுதி தாளில் 100 மதிப்பெண்களுக்கு 40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றால் போதும். பொது அறிவு தாள் 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

குரூப் 2ஏ பதவிகளுக்கும் 2 தாள்கள் உள்ளன. தமிழ் தகுதி தாள் மட்டும் விரிவாக விடையளிக்கும் வகையில் அமையும். இதில் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் போதும். இரண்டாம் தாள் - பொது அறிவு, நுண்ணறிவு ஆகியவற்றுடன் 300 மதிப்பெண்களுக்கு இடம்பெறும். இதில் கொள்குறி வகையில் அமையும். இதில் பெறும் மதிப்பெண்கள் எடுத்துகொள்ளப்படும்.

இரண்டும் தேர்விற்கும் தமிழ் மொழி தகுதித் தாள் 10-ம் வகுப்பு தரத்தில் அமையும்.

இப்பதவிகளுக்கு நேர்காணல் கிடையாது. முதன்மைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

முதன்மைத் தேர்வு முடிவுகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற்று, முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியானத்பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். மார்ச் மாதம் முடிவுகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குரூப் 2ஏ பதவிகளுக்கு முதலிலும், குரூப் 2 பதவிகளுக்கு பின்னரும் வெளியாகலாம்.