#JUST IN : விசிக போட்டியிடும் தொகுதிகள் இது தான்..!
திமுக கூட்டணியைப் பொறுத்தவரையில், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிக்கு தலா 2 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள், இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள், காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், விசிகவுக்கு 8 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள், தேமுதிக 10 தொகுதிகள், மனிதநேய ஜனநாயகக் கட்சி, எஸ்.டி.பி.ஐ, முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 என மொத்தம் 69 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் 11 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் மற்ற கட்சியினர் போட்டியிடவுள்ளனர். திமுக கூட்டணியில் இருக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் விசிகவிற்கு என்னென்ன தொகுதிகள் போட்டியிடுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி,காட்டுமன்னார்கோயில், செய்யூர் பண்ருட்டி ( பொது), திருப்போரூர் ( பொது) பெரியகுளம், கள்ளக்குறிச்சி, திண்டிவனம், அரக்கோணம் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.