#JUST IN : மீண்டும் எழுந்த சர்ச்சை..! 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து..!
தமிழகத்தின் 13-ஆவது முதல்வராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் கடந்த மே 10 காலை 10.15 மணியளவில் பதவியேற்றார். தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன் பின்னர், 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், பொதுவாக தமிழ்நாடு அரசு விழாக்களில் கடைப்பிடிக்கப்படும் வழக்கமான மரபு மாற்றப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.வழக்கமாக, தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து ஒலிக்கப்படும். நிகழ்ச்சி இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது மரபாக இருந்து வருகிறது.ஆனால், இன்றைய நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது. அதன் பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக ஒலிக்கப்பட்டது.
இதனால், தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்படும் மரபைப் பின்பற்றாமல் பின்னுக்குத் தள்ளப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.முதல்வர் விஜய்யின் முதல் நிகழ்ச்சிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு மூன்றாவது இடம் அளிக்கப்பட்டது பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற தமிழ்நாடு புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவிலும் தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு முன்பு தேசிய கீதம் பாடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.