#JUST IN : புதுச்சேரியில் கள்ள ஓட்டு போட்ட தமிழக இளைஞர் கைது..!
புதுச்சேரியில் கடந்த 9ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் ஒருவர் கள்ள ஓட்டு போட்டதாக கைதாகியுள்ளார்.
மண்ணாடிப்பட்டு ஜவஹர்லால் நேரு சமுதாய நலக்கூடத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் இந்த கள்ள ஓட்டு பதிவானது. தேர்தல் அதிகாரி சீனிவாசன் என்று பெயரை அறிவிக்க பூத் ஏஜென்ட்கள் அவர் பெயரை குறித்துக் கொண்டனர். இவர் மேல் சந்தேகம் ஏற்பட்டு அவர் வாக்கை பதிவு செய்து திரும்பும் போது அவரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
விசாரித்த போது அவர் புதுச்சேரியை சேர்ந்தவர் அல்ல என்பதும், சீனிவாசன் என்ற பெயரில் வந்து ஓட்டு போட்ட அரவிந்த், வயது 31, விழுப்புரத்தைச் சேர்ந்தவர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. தனது நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் திருக்கனூர் வந்து, பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக கள்ள ஓட்டு போட்டதாக அவர் போலீஸிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து அவரை பிடித்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.