×

#JUST IN : இன்று மகாராஷ்டிரா துணை முதலமைச்சராகிறார் சுனேத்ரா பவார்..!

 

அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் இன்று புதிய துணை முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சரான அஜித் பவார், தனது சொந்த தொகுதியான பாராமதிக்கு சென்ற போது விமான விபத்தில் உயிரிழந்தார். அஜித் பவார் உயிரிழந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அஜித் பவார் மறைவைத் தொடர்ந்து அவரது கட்சியில் பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. கட்சியின் அடுத்த தலைவர் யார்? என பல கேள்விகள் எழுந்தன. இந்த சூழலில் அஜித் பவாரின் மனைவி சுனேத்ராவுக்கு பதவி வழங்க என்சிபி கட்சியினர் பாஜகவை அனுகியுள்ளனர். 

இந்நிலையில், மஹாராஷ்டிரா துணை முதல்வராக சுநேத்ரா பவார் இன்று பதவியேற்றுக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், அம்மாநிலத்தின் முதல் பெண் துணை முதல்வர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கிறது. சுநேத்ரா தற்போது ராஜ்யசபா எம்பி ஆக உள்ளார். அஜித்பவார் மறைவு காரணமாக காலியாகிஉள்ள பாராமதி தொகுதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.மராட்டியத்தில் பாஜக, சிவசேனா, என்சிபி கூட்டணி ஆட்சி நடக்கிறது.

மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார், இன்று மாலை 5 மணி அளவில் மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய துணை முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.அதேபோல், அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவராகவும் நியமிக்கப்பட உள்ளார். இதன் மூலம் அஜித் பவார் தலைமையிலான கட்சியில் சுனேத்ரா பவார் மிக முக்கிய அதிகாரமிக்க இடத்தைப் பிடிக்கிறார்.