☰
×

#JUST IN : சிலிண்டர் விலை திடீர் உயர்வு! தற்போது என்ன விலை?

 

எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் ஒவ்வொரு மாதமும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலைகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. 

வர்த்தகப் பயன்பாட்டுக்கு சிலிண்டர் விலை ₹11 உயர்த்தப்பட்டுள்ளது.

19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ₹3,016-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையில் மாற்றமின்றி 957.50 ரூபாயாக தொடர்கிறது.

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் ஓட்டல்கள், உணவகங்கள், பேக்கரிகள், டீக்கடைகள், கேன்டீன்கள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்களுக்கு சமையல் கியாஸ் செலவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே சமையல் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், வணிக சிலிண்டர் விலை உயர்வும் வணிகர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரத்தில், வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.