×

#JUST IN : திமுக நிறைவேற்றிய தீர்மானத்தில் திடீர் திருத்தம்..! 

 

திமுக செயற்குழு கூட்டத்தில் மாவட்டச்செயலாளர்களுக்கான பதவிக்கால வரம்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஒருவர் 2 முறை மட்டுமே மாவட்டச் செயலாளராகப் பதவி வகிக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், சுமார் இரண்டரை மணி நேர ஆலோசனைக்குப் பிறகு அந்த வரம்பு 3 முறையாக மாற்றி திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.