×

#JUST IN : முதல் ஒரு மணி நேர நிலவரம்; 2 லட்சத்தை கடந்தது அண்ணாமலை இயக்கம்..!!

 

பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் ராஜினாமாவை பாஜ தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது. 


இந்த சூழலில் சமூகவலைதளத்தில் நேரலையில் அடுத்தக் கட்ட திட்டம் குறித்து பேசியதாவது: தமிழர் பண்பு என்பதால் தலைமையை சந்திக்க டில்லி வந்தேன். தமிழர்களின் உணர்வுகளை விட்டுக்கொடுத்தது இல்லை. தனிப்பட்ட ஒரு கட்சிக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை. அனைத்து தேர்தலிலும் பாஜ தனித்து போட்டியிட விரும்பினேன்.தன் இயக்கத்தில் சேரும்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அழைத்தபோதும் மறுத்துவிட்டு பாஜ கட்சியில் இணைந்தேன்.தமிழகத்தின் அடையாளம் பாஜவில் இருக்க வேண்டும் என்று சொல்லியே உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவற்றை சந்திக்க அறிவுறுத்தினேன். மீத்தேன், நிலக்கரி சுரங்கம், மேகதாது உள்ளிட்ட அனைத்திலும் தமிழக உாிமையை விட்டுக்கொடுத்தது கிடையாது. மோடி மீது பெருமை வைத்துள்ள மனிதன் நான், அவருக்கு நான் பிரச்னையாக இருக்கக்கூடாது என கருதுகிறேன். ஓராண்டாகவே எனது கருத்து வேறுபாட்டை பாஜ தலைவர்களிடம் சொல்லி வருகின்றேன். தேர்தல் பணி முடித்துவிட்டு செல்லுமாறு கட்சி அறிவுறுத்தியதால் தான் இவ்வளவு நாள் தொடர்ந்தேன்.

மோடி நம்முடைய பிரதமர். அதில் எந்த மாற்றமும் இல்லை. பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். பிரச்னை, பிரச்சனை என தொடர்ந்து அவரை என்னால் தொந்தரவு செய்ய முடியாது. சின்ன, சின்ன கருத்து வேறுபாடுகள் இருந்தன. நான் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என முன்கூட்டியே கட்சி தலைமை நிர்வாகிகளிடம் தெரிவித்தேன். பாஜ தலைமையிடம் கருத்து வேறுபாடுகளை தொடர்ந்து சொல்லி வருகிறேன். டிசம்பர் மாதமே கட்சியை விட்டு வெளியே செல்கிறேன் என்பதை தெரிவித்திருந்தேன். தேர்தலை முடித்து விட்டு செல்லுங்கள் என கூறினார்கள். நான் மிக பொறுமையாக இருந்தேன்.

புதிய பாதை, புதிய இயக்கம், புதிய பரிமாணத்தோடு, பார்வையோடு ஆரம்பிக்க வேண்டும் என்பது என் ஆசை. தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத்தேர்தலில் நமது கட்சி போட்டியிடும்; அதில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்த அண்ணாமலை இது நம்ம இயக்கம் (we the leaders) என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி இருக்கிறார். அண்ணாமலை தொடங்கியுள்ள இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை வேகமாக நடந்து வருகிறது. 

முதல் ஒரு மணி நேரத்தில் 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் பதிவு செய்து இணைந்துள்ளனர். ஏற்கனவே இளைஞர்கள் மத்தியில் அண்ணாமலைக்கு மிகுந்த செல்வாக்கு உண்டு, அது தற்போது நிரூபணம் ஆகும் வகையில் அண்ணாமலையில் இயக்கத்தில் இளைஞர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இணைந்து வருகின்றனர்.

அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைய லிங் இதோ! https://wetheleader.org/