×

#JUST IN  : வெளியான திடுக்கிடும் தகவல் : தயாரிப்பாளர் ராஜனின் தற்கொலைக்கு காரணம் இதுதான்!

 

யூடியப் தொலைக்காட்சிகளிலும், திரைப்பட நிகழ்ச்சிகளிலும் சுறுசுறுப்பாகவும், ஆவேசமாகவும் பேசும் தயாரிப்பாளரான ராஜனின் தற்கொலை முடிவுக்கு காரணம் என்ன? என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

 1983ம் ஆண்டு முதல் திரையுலகில் செயல்பட்டு வரும் ராஜன் கடந்த 40 ஆண்டுகளில் ஏராளமான வருவாயை ஈட்டியுள்ளார்.

அவ்வாறு தான் சம்பாதித்த பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை தனக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள் ஆகியோர்களுக்கு ராஜன் கடனாக அளித்துள்ளார். அவர் அளித்த கடன் பணத்தை திருப்பிக் கேட்டபோது பலரும் அந்த பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.  இதனால் குடும்பத்தாருக்கு ராஜன் மீது கோபம் ஏற்பட்டதாம். கொடுத்த கடனை வாங்க முடியாத காரணத்தால் ராஜனுடன் குடும்பத்தாருக்கு தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் அவர் குடும்பத்தாரை விட்டுப் பிரிந்து நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஸ்டார் ஹோட்டலில் தங்க ஆரம்பித்திருக்கிறார்.

கடந்த சில மாதங்களாக அவர் குடும்பத்தாருடன் சேர்ந்து வாழவில்லை. ஹோட்டலில் தங்கியபோதிலும் குடும்ப தகராறு ஓயவில்லையாம். இதையடுத்தே அவர் ஆற்றில் குதித்து இறந்துவிட்டதாக கூறப்படுகிறது .

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/DgVDcgHTPZI?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/DgVDcgHTPZI/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">