#JUST IN : முசிறி அருகே கோர விபத்து... பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த மாணிக்கம், சங்கிலி, முருகன், ராஜேஷ், சக்திவேல், சுப்பிரமணியன் உள்ளிட்ட 10 பேர் செங்கல் சூளையில் பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற காதணி விழாவில் பங்கேற்பதற்காக தங்களது சொந்த ஊரான திருக்காட்டுப்பள்ளியில் இருந்து காரில் நாமக்கல் மாவட்டத்திற்குச் சென்றுள்ளனர்.
அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, மீண்டும் தங்களது சொந்த ஊருக்குக் காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது துறையூர் – முசிறி சாலையில் ஜெம்புநாதபுரம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த வேப்ப மரத்தின் மீது அதிவேகமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்த நிலையில், காரில் பயணம் செய்த மாணிக்கம், சங்கிலி, முருகன், ராஜேஷ், பாவாடைஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த சக்திவேல், சுப்பிரமணி உள்ளிட்ட 4 பேர் சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி சக்திவேல், சுப்ரமணி, சீதாராமன் ஆகிய 3 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெம்புநாதபுரம் காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
#BREAKING | முசிறி அருகே கோர விபத்து - 5 பேர் உயிரிழப்பு! #SunNews | #Musiri | #CarAccident https://t.co/SecSv2z3Iu
— Sun News (@sunnewstamil) November 22, 2026
#BREAKING | முசிறி அருகே கோர விபத்து - 5 பேர் உயிரிழப்பு! #SunNews | #Musiri | #CarAccident https://t.co/SecSv2z3Iu
— Sun News (@sunnewstamil) November 22, 2026