#JUST IN : திருவல்லிக்கேணியில் பரபரப்பு..! சம்மன் அனுப்பியும் காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை..!
முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்பதற்காக அக்கட்சியின் எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசப்பட்டதாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாக கூறி சம்மன் அனுப்பட்ட நிலையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி இதுவரை ஆஜராகவில்லை. இன்று காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டிய நிலையில் இதுவரை செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை என்று செய்தி வெளியாகியுள்ளது.
தவெ எம்எல்ஏக்களை இழுக்க பேரம் பேசியதாக சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் மற்றும் திருச்சியைச் சேர்ந்த நரேஷ் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி வரையில் பேரம் பேசியதாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தொடர் விசாரணையில், தவெக ஆட்சி கவிழ்ப்பு பின்னணியில், கோவை தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏவும், அக்கட்சியின் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி மற்றும் அவரின் சகோதரர் அசோக்குமார் ஆகியோர் இருப்பது தெரிய வந்துள்ளது. செந்தில்பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு ஆஜராகுமாறு இருவருக்கும் திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் அளித்திருந்தனர்.இருவரும் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் நிலையில், செந்தில் பாலாஜியும், அவரது சகோதரர் அசோக்கும் ஆஜராகவில்லை.