#JUST IN : விஜய் இல்லத்தில் போலீசார் பெருமளவில் குவிப்பு..!
சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முடிவுகளை பொறுத்து அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், காலை 9:16 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழககம் 62 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. எந்த தொகுதிகளில் எல்லாம் த.வெ.க வெற்றிபெறும் என்று தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இந்த பரபரப்பான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நேரத்தில் சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் வீட்டிற்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தவெக தலைவர் விஜய் இல்லத்தின் வெளியே ஒரு துணை ஆணையர், ஒரு உதவி ஆணையர், ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் CRPF வீரர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
மேலும் விஜய் இல்லத்திற்கு வர கூடிய கபாலீஸ்வரர் நுழைவாயிலில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு. ரசிகர்கள், தொண்டர்கள் அதிகளவில் கூடாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது