#JUST IN : தவெக வேட்பாளர்களுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி..!!
MLA பதவியை ராஜினாமா செய்த அதிமுகவினர் தவெகவில் இணைந்த நிலையில், “அவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்" என சைதாப்பேட்டை வழக்கறிஞர் சுதன் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி அமர்வு, 'இதுபோன்ற சட்டத்தை நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம்தான் இயற்ற முடியும்' என தீர்ப்பளித்து,
இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
அதிமுகவில் இருந்து தவெக-வில் இணைந்தவர்கள்:
1. மரகதம் குமரவேல் - மதுராந்தகம் தொகுதி
2. சத்தியபாமா - தாராபுரம் தொகுதி
3. ஜெயக்குமார் - பெருந்துறை தொகுதி
4. இசக்கி சுப்பையா - அம்பாசமுத்திரம் தொகுதி
5. எம்.ஆர்.விஜயபாஸ்கர் - கரூர் தொகுதி
6. சி.விஜயபாஸ்கர் - விராலிமலை தொகுதி
மேற்கண்ட 6 தொகுதிகளுடன், முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியும் தற்போது காலியாக இருக்கிறது. இந்நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.
மற்ற 5 தொகுதிகளிலும் தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால், இடைத்தேர்தல் நடத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற 2 எம்எல்ஏக்கள் தான், தவெக சார்பில் போட்டியிடுகின்றனர்.