×

#JUST IN : திருமயம் அருகே  உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..! 

 

புதுக்கோட்டை திருமயம் அருகே உள்ள ஒரு தனியார் பட்டாசு தயாரிப்பு கிடங்கில் (குடோன்) திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த சமயத்தில் அந்தப் பட்டாசு கிடங்கிற்குள் சுமார் 7 தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில், அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி ஒருவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த அதிர்ச்சிகரமான வெடி விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி உடல் கருகி, கடுமையான படுகாயமடைந்துள்ளார்.

விபத்து குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர், படுகாயமடைந்தவரை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்கு பதிவு செய்து வெடி விபத்திற்கான முதன்மைக் காரணம் என்ன என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.