☰
×

#JUST IN : புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியைக் கைப்பற்றியது என்.ஆர்.காங்கிரஸ்..!

 

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால், தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அசோக் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் விநாயகத்தை விட 8,474 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளார்.

தபால் வாக்கு எண்ணிக்கையில் இருந்தே என்.ஆர் காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2-வது இடத்தை காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் பெற்றார். திமுக வேட்பாளர் சேது 3-வது இடத்தையும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சலீம் 4-வது இடத்தையும், நாதக வேட்பாளர் கார்த்திக் குமாரி 5-வது இடத்தையும் பெற்றனர்.