#JUST IN : தமிழ்நாடு - ஹிந்துஜா குழுமம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் - ரூ.2500 கோடி முதலீடு செய்கிறது ஹிந்துஜா குழுமம்..!
Aug 13, 2026, 11:34 IST
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசின், வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு சென்னையில் இன்று நடைபெற்றது.தவெக அரசு சார்பில் நடைபெறும் முதல் முதலீட்டாளர் நிகழ்வு என்பதால் மிகப்பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் ஒட்டுமொத்தமாக 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.
தவெக அரசு பதவியேற்ற 100 நாளில் ஒரு லட்சம் கோடி முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது.வெற்றித் தமிழ்நாடு மாநாட்டில் செய்யப்படவுள்ள முதலீட்டின் மூலமாக 1,06,998 வேலை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் ரூ.2500 கோடி முதலீடு செய்கிறது ஹிந்துஜா குழுமம்.த
- தமிழ்நாடு - ஹிந்துஜா குழுமம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
- EV வாகனம் - தமிழ்நாட்டுடன் அலட்ராவயோலெட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- அல்ட்ராவயோலெட் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.779 கோடி முதலீடு
- கிருஷ்ணகிரியில் அமைகிறது அல்ட்ராவயோலெட் EV ஆலை - 4000 பேருக்கு வேலை
- முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம்
- டெய்ம்லர் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.4000 கோடி முதலீடு
- காஞ்சிபுரத்தில் அமைகிறது டெய்ம்லர் நிறுவனத்தின் ஆலை
- ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ரூ.250 கோடி முதலீடு செய்கிறது
- லூகாஸ் டிவிஎஸ் நிறுவனம் ரூ.2500 கோடி முதலீடு செய்கிறது
- தமிழ்நாட்டில் ரூ.1000 கோடி முதலீடு செய்கிறது டைட்டன்
- செயின்ட் கோபைன் நிறுவனம் ரூ.2000 கோடி முதலீடு செய்கிறது
- ரூ.5000 கோடி முதலீடு செய்கிறது ஜே.கே. டயர்ஸ் நிறுவனம்
- பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் ரூ.1000 கோடி முதலீடு
மாநில பொருளாதாரத்தை 2036க்குள் 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு; வேலைக்காக யாரும் சொந்த ஊரை விட்டு செல்லக்கூடாது என்பதே இலக்கு
த.வெ.க அரசின் முதல் முதலீட்டாளர் மாநாட்டில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பேச்சு