#JUST IN : விஜய் பிரசாரத்தின்போது பைக்கில் சாகசம் செய்த நபருக்கு ரூ.3,000 அபராதம்..!
Apr 17, 2026, 14:47 IST
தவெக தலைவர் விஜய்யின் பரபு்ரை வாகனத்திற்கு பின்னால் சாகம் செய்தபடி, இருசக்கர வாகனம் ஓட்டியவருக்கு ரூ.3,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஹெல்மெட் அணியாமல் கைகளைவிட்டபடி, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் மனோஜ் குமார் என்பவருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். விஜய் பிரசாரத்திற்கு செல்லும்போதெல்லாம் அவரது வாகனத்தை தவெகவினர் பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்குவது தொடர்கிறது.