×

#JUST IN : இடைத்தேர்தலில் திமுகவுக்கு மல்லை சத்யா ஆதரவு..!

 

தவெக கூட்டணியில் மதிமுக அங்கம் வகித்து வரும் நிலையில், அந்த கட்சியில் இருந்து பிரிந்த வந்த மல்லை சத்யா இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்று கொண்டிருக்கிறது.

சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக திராவிட வெற்றி கழகத்தின் தலைவர் மல்லை சத்யா இன்று (செப்.12) அறிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்த அவர், தற்போதைய தவெக அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு அலை வீசி வருவதாக இந்த சந்திப்பின் பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

 ஒரு இடைத்தேர்தல் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் இயற்கை எய்தினார் என்றால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வரும். அல்லது நீதிமன்றத்தால் தகுதி இழப்பு செய்யப்பாட்டால் இடைத்தேர்தல் வரும். ஆனால் ஒரு உறுப்பினர் வாக்களித்த விரல் மை அழிவதற்கு முன்பாக சுய லாபத்துக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார்கள். இதனை வாக்காளர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

மதுராந்தகம் தொகுதியை பொறுத்தவரை ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளார்கள். குறிப்பாக வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறவர்கள் மீது மிகப்பெரிய எதிர்ப்பு அலை வீசி கொண்டிருக்கிறது. எனவே திமுக சார்பாக நிறுத்தப்பட்டுள்ள பரந்தாமன் மகத்தான வெற்றி பெறுவார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சட்டமன்றம் சண்டை மன்றமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தின் போக்கு சரியில்லை.

எனவே ஜனநாயகத்தை காப்பதற்கு இன்று திமுகவை சார்ந்த திராவிட வெற்றி கழகத்தின் ஆதரவினை அளித்துள்ளோம். எங்களை சிரித்த முகத்துடன் அண்ணன் மு.க. ஸ்டாலின்வரவேற்றார் என்றார். மேலும் அவர் ஏற்கனவே இருந்த மதிமுக என்பது கரைந்து போன கட்சியாக ஆகியுள்ளது. தனது மகனுக்காக நிர்வாகிகளை இழந்துள்ளார். இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை இழந்திருக்கிறார் என வைகோ பெயரை குறிப்பிடாமல் விளாசினார் மல்லை சத்யா.