#JUST IN : முதலமைச்சருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சவால்..!
முதலமைச்சருக்கு வெளிப்படையாக சவால் விடுகிறேன். முதலமைச்சர் மேசையில் உள்ள கோப்புகளை அவர் விரைந்து வெளியிடட்டும். ஆதாரம் இருந்தால் யார் மீது தவறு இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும். இந்த உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்.- சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபாநாயகர் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். ஆளுங்கட்சியினர் ஆதாரமில்லாமல் பல குற்றச்சாட்டுகளை வைப்பதை உடனடியாக நீக்கி விடுகிறீர்கள். கேள்வி கேட்டால் நாங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பதில் சொல்கிறார்கள்.
நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 19) முதலமைச்சர் பேசியபோது, அவருடைய மேஜையில் ஃபைல்ஸ் இருப்பதாக எங்களது அரசை குற்றசாட்டும் நோக்கில் பேசியுள்ளார். தயவுசெய்து அந்த ஃபைல்ஸை திறந்து பார்க்க வேண்டும். அவர் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்காக பயப்படுகிறீர்கள் என்ற வசனத்தை கூறியிருக்கிறார்.
நாங்கள் ஒரு கேள்வி கேட்டால் நாங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு பதிலை சொல்கிறார்கள். சட்டமன்ற நிகழ்வுகள் முதன்முதலில் நேரலை செய்யப்பட்டது திமுக ஆட்சியில்தான். கேள்வி - பதில் நேரத்தை முதன்முதலில் நேரலை செய்ததும் நாங்கள்தான். ஆனால் கேள்வி - பதில் விவாதமே நடத்த முடியாத சூழல்தான் தற்போது உள்ளது.
அனைத்தையும் நேரலை செய்து வருகிறீர்கள். அனைத்தையும் நேரலை செய்வதால் என்ன பிரச்சினை வருகிறது என்று நாங்கள் கூறி வருகிறோம். அவைக்குறிப்பில் இருந்து ஒரு வார்த்தை நீக்கப்படுவதற்கு முன்பாகவே அது நேரலையில் சென்றுவிடுகிறது. சபாநாயகர் அவைக்குறிப்பில் நீக்கும் வார்த்தையை முழுமையாக நீக்கவேண்டும்” என்றார்.
எல்லா நிகழ்ச்சிகளையும் நேரலை செய்கிறர்கள். அவைக் குறிப்பில் இருந்து நீக்குவது எல்லாம் ரீல்ஸாக வெளியில் செல்கிறது. இதைத்தான் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் சொல்ல, இதற்கு பதில் அளித்த சபாநாயகர், நீக்கப்பட்ட வாதங்களை குறிப்பிடும் மீடியாக்கள் விபரத்தை கொடுத்தால், அவர்கள் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.