×

#JUST IN : இடைக்கால பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்..!!

 

இடைக்கால பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் :

* தஞ்சை, ஈரோடு, ராமநாதபுரம், சென்னையில் ரூ.285 கோடியில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளது

* 8 பிற மாநிலங்கள், அயல்நாடுகளில் தமிழ் படிப்பதற்கான மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன

* மகளிர் சுய உதவிக் குழுக்களில் ரூ.6.23 லட்சம் குழுக்களுக்கு ரூ.1.41 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

* கோவில்களில் பெண் ஓதுவார் நியமனம் திமுக அரசின் மகத்தான சாதனையாகும்.

* அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பாக பிரசவம் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்

* மகளிருக்கான இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

* தமிழ்நாட்டில் மகளிருக்காக 19 தோழிகள் விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன

*6,23,529 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.41 லட்சம் கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.

* பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான அன்புக்கரங்கள் திட்டத்தில் 10,637 குழந்தைகள் பயன்பெறுகின்றனர்.

* மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு மையங்களாக 25 இடங்களில் அன்புச்சோலைகள் திறக்கப்பட்டுள்ளன.

*தாயுமானவர் திட்டத்தின் கீழ் 27 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

* உள்ளாச்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் 3,632 பேர் நியமன உறுப்பினர்களாக பொறுப்பேற்பு

* ரூ.10 கோடியில் அயலக தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்கும் பணி நடைபெறும்.

* மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1,471 கோடி ஓதுக்கீடு

* இலங்கை தமிழர்களுக்காக உதவித்தொகை உட்பட பல திட்டங்களுக்கு மொத்தம் ரூ.456 கோடி செலவிடப்பட்டுள்ளது.

* பேராசிரியர் அன்பழகனார் திட்டத்தில் 3,721 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

* இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு

* முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் 5 ஆண்டுகளில் ரூ.101 கோடி அளவில் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

* சிறப்பு திட்ட செயலாக்கத் துறைக்கு ரூ.17,088 கோடி ஒதுக்கீடு.

* உயர்கல்வி துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.8505 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

* ஊரக வளர்ச்சித் துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.28,638 கோடி ஒதுக்கீட செய்யப்படுகிறது.

* இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

* கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 1.71 லட்சம் வீடுகள் கட்டி முடிப்பு- மேலும் 1 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு

* முதல்வர் விளையாட்டு போட்டிக்கு ரூ.47 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நகராட்சி நிர்வாகத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.28,227 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* கலைஞர் விளையாட்டு தொகுப்புகள் திட்டத்தில் 12,525 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*கூட்டு குடிநீர் திட்டங்களை செயல்படுத்த ரூ.809 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன.

* சென்னையில் உள்ள நீர் நிலைகளை ஒருங்கிணைத்து சமச்சீராக குடிநீர் வியோகிக்க முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் ரூ.3,109 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* ஆசிரியர்கள் நலம் பேண முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

* காலை உணவுத் திட்டம் மூலம் 19.34 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். 4 ஆண்டுகளில் ரூ.1,284 கோடி ஒதுக்கீடு

* சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதுவரை 77,800 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.

* 10 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் இதுவரை 6.75 லட்சம் மாணவர்களுக்கு ம டிக்கணினி வழங்கப்பட்டுள்ளன.

* 8,52,680 மாற்றுத்திறனாளிகள் மாதம் ரூ.2,000 பராமரிப்பு தொகை, ரூ,1,500 உதவித்தொகை பெறுகின்றனர்.

* கடந்த 5 ஆண்டுகளில் 38 புதிய அரசு கலை, அறிவியல், கல்லூரிகள் உருவாக்கப்பட்டு 18,760 மாணவர்கள் கூடுதலாக பயனடைந்து வருகின்றனர்.

* பள்ளிக்கல்வித் துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் நிதி ரூ.48,534 கோடி ஒதுக்கீடு.

* 11 பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பாடத் திட்டங்கள் அறிமுகம்

* புதுமைப்பெண் திட்டத்தில் 6.95 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.

* தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.1,996 கோடி ஒதுக்கீடு

* நதிக்கரை மேம்பாட்டுக்கு ரூ.374 கோடி ஒதுக்கீடு.

* மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 2.55 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.

* நான் முதல்வன் திட்டத்தில் 48,65,050 மாணவர்களுக்கு திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

* GIG தொழிலாளர்கள் 2000 பேருக்கு தலா ரூ.20,000 மானியம்.

* புதிதாக 30 முதல்வர் படைப்பகங்கள் அமைக்க ரூ.104 கோடி ஒதுக்கீடு

* அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.6000 கோடி ஒதுக்கீடு.

* மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.22,090 கோடி ஒதுக்கீடு.

* திருச்சி, மதுரை, ஓசூரில் ரூ.1,070 கோடியில் புதிய டைடல் பூங்கா நிறுவப்பட்டு வருகிறது.

* 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் என்கிற பொருளாதார வளர்ச்சி உடன் அரசு இயங்கி வருகிறது.

* சென்னை தரமணியில் செமிகண்டக்டர் மையம் அமைக்கும் பணி நடைபெறுகிறது.

* செமி கண்டக்டர் இயக்கத்துக்கு 5 ஆண்டு செயல்திட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு

* தொழில்துறையில் ரூ.12.30 லட்சம் கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.

* கப்பல் கட்டும் தொழிலில் உலகளாவிய முதன்மையான மையமாக தமிழகத்தை மாற்ற நடவடிக்கை

* 11.19% எனும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி பெற்று நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது தமிழ்நாடு.

* வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6,500 கோடி மதிப்பில் பணிகள் நடந்த வருகின்றன.

* விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ரூ.6,374 கோடி ஒதுக்கப்பட்டு 87,34,363 கோரிக்கைகள் தீர்ப்பு

* தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.219 கோடி ஒதுக்கீடு.

* 5 ஆண்டில் 36 லட்சத்துக்கும் மேலான வேலை வாய்ப்பு உருவாகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலையில் 1,000 மெகாவாட் மின்னுற்பத்தி திட்டம்

* 5 ஆண்டுகளில் 38,62,919 அமைப்பு சாரா தொழிலார்களுக்கு ரூ.3,397 கோடி நலத்திட்ட உதவிகள்.

* வனவிலங்குகளை பாதுகாப்ப 6 புதிய வனவிலங்கு சரணாலயம்

* நாமக்கல், விருதுநகர், நெல்லை உள்ளிட்ட இடங்களில் 9 நியோ டைடல் பூங்கா கட்டப்படுகின்றன.

* இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்ட நிதி ஒதுக்கீடு, 10,469 வீடுகள் கட்ட ரூ.639 கோடி ஒதுக்கீடு.

* சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ரூ.1,618 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

* அலையாத்தி காடுகளை மீள் உருவாக்கம் செய்யும் பணி நடைபெறுகிறது.

* 5 ஆண்டில் 100 புதிய பாதுகாக்கப்பட்ட காடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

* கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் 118 பரப்பளவில் சுற்றுச்சூழல் பூங்காவையும் அரசு அமைக்கிறது.

* ஆண்டுதோறும் ரூ.2.5 லட்சம் கோடி தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஏற்றுமதி செய்யப்படுகிறது.

* புதிய சிற்றுந்து திட்டம் மூலம் 6303 புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவை வழங்கப்பட்டுள்ளது.

* தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் எரிசக்தி துறைக்கு ரூ.18,091 கோடி ஒதுக்கீடு.

* கடந்த 5 ஆண்டுகளில் ரூ.6130 கோடியில் 12,087 பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கீடு.

* கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் 10,226 பணிகள் ரூ.5300 கோடியில் மேற்கொள்ளப்பட்டன.

* மாணவர்களுக்கு கட்டணமில்லா பஸ் பாஸ் திட்டத்திற்கு ரூ.1782 கோடி ஒதுக்கீடு.

* கலைஞர் கைவினை திட்டம் மூலம் ரூ.405 கோடி கடன் உதவி, ரூ.83 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

* மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.4000 கோடி ஒதுக்கீடு.

* நெடுஞ்சாலை துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.21,132 கோடி ஒதுக்கீடு.

* போக்குவரத்து துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு

* ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3,934 கோடி ஒதுக்கீடு.

* பழங்குடியின மக்களுக்கு 6655 வீடுகள் கட்டும் திட்டத்திற்காக ரூ.450 கோடி ஒதுக்கீடு.

* பழங்குடியினர் வீடு கட்டுமான பணிகளுக்கு ரூ.755 கோடி ஒதுக்கீடு

* சென்னையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடி மதிப்பில் உயர்மட்ட சாலை

* 30.79 கோடி உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழ்நாடு வந்துள்ளனர்.

* மின்சார துறைக்கு ரூ.18,091 கோடி ஒதுக்கீடு.

* சிறுபான்மை நலத்துறைக்கு ரூ.1634 கோடி ஒதுக்கீடு.

* 5 ஆண்டுகளில் சிறுபான்மை மாணவர்கள் 90,773 பேருக்கு கல் உதவித்தொகை.

* அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2-க்கு நிதி ரூ.28,687 கோடி ஒதுக்கீடு.

* கால்நடை பராமரிப்பு, பால்வளம் மீனவர் நலத்துறைக்கு ரூ.4,435 கோடி ஒதுக்கீடு.

* அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின்கீழ் ரூ.160 கோடியில் 385 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

* சுற்றுலா துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1,394 கோடி ஒதுக்கீடு

* உலகளாவிய சுற்றுலா மாநாடு மூலம் 127 நிறுவனங்களுடன் ரூ.22,794 கோடி ஒப்பந்தங்கள் கையெழுத்து.

* அதிகம் அறிப்படாத 22 சுற்றுலாத்தலங்கள் ரூ.100 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

* கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு லு.1317 கோடி ஒதுக்கீடு

* நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.21,132 கோடி ஒதுக்கீடு.

* 5 ஆண்டுகளில் 12,931 கோவில்களில் ரூ.8,100 கோடியில் திருப்பணிகள்.

* 5 ஆண்டுகளில் 4,180 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

* ரூ.8363 கோடி மதிப்புள்ள 8,113 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

* கூட்டுறவுத்துறைக்கு ரூ.17,068 கோடி ஒதுக்கீடு.

* தமிழ்நாட்டில் பசுமை பரப்பை உயர்த்த அரசு தொடர்ந்து நடவடிக்கை

* விவசாயிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.69,087 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.

* ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் ரூ.150 கோடியில் மீன் பிடித்துறைமுகம் அமைக்கப்படுகிறது.

* ரூ.148 கோடியில் குந்துக்கால் மீன்பிடி இறக்குதளம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன

* பழங்குடியின மக்களுக்கான தொல்குடி திட்டத்தின்கீழ் ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* பழமையான தேவாலயங்கள் ரூ.25 கோடியில் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

* கைத்தறி, கதர் துறைக்கு ரூ.1943 கோடி ஒதுக்கீடு

* கிளாம்பாக்கத்தை தொடர்ந்து குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

* ராமநாதபுரம் மாட்டம் பாம்பனில் ரூ.58 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு வருகிறது.

* ரூ.471 கோடியில் 64 புராதன கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

* தொன்மையான பள்ளிவாசல்கள், தர்காக்கள் மேம்பாட்டுக்கு ரூ.58 கோடி ஒதுக்கீடு

* தூய்மை பணியாளர்களுக்கு கூடுதலாக 30,000 வீடுகள்

* அரசு ஊழியர்களுக்கான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்துக்கு ரூ.11,000 கோடி

* ரூ.758 கோடியில் பால் பண்ணைகள் நவீனமயமாக்கப்படும்.

* மக்களுடன் முதல்வன் திட்டத்தின் கீழ் 23.50 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

* 5 ஆண்டுகளில் 43 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

* கடந்த 5 ஆண்டுகளில் 81 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

* 5 ஆண்டுகளில் 14,318 பேர் காவல்துறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

* மனிதவள மேலாண்மை துறையில் 1,55,131 பேர் பணி நியமனம் செய்யப்பட்டு ரூ.1.55 லட்சம் ஒதுக்கீடு.

* மக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு ஏற்படுத்த மாநிலம் முழுவதும் 4135 முகாம்கள் நடத்தப்பட்டு 23.5 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன.

* பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க திட்டம்.

* போதைப்பொருட்களுக்கு எதிராக தூதுவர்களாக செயல்பட 4 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி.

* பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு 58,211 வீடுகள் கட்டப்பட்டுள்ளன,

* கோவை, திருச்சி, கடலூர், சேலம், திருநெல்வேலியில் நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

* கடந்த 5 ஆண்டுகளில் 37 புதிய தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்ப்டடுள்ளன.

* கடந்த 5 ஆண்டுகளில் 1.55 லட்சம் பேர் அரசுப்பணியில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

* தஞ்சை, சேலம், நாமக்கல்லில் மாவட்ட சிறை வளாகங்கள் அமைக்க நடவடிக்கை

* கைத்தறி, கதர் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு.

* பொதுப்பணி துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ1,694 கோடி ஒதுக்கீடு.

* 5 ஆண்டுகளில் பேரிடம் நிவாரண நிதியாக மத்திய அரசிடம் கேட்டது ரூ.50,922 கோடி- கிடைத்தது ரூ.1,151 கோடி.

* சென்னை மாநகாட்சியில் பேரிடம் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.

* பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்வு

* உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 10,000 முகாம்கள் நடத்தப்பட்டு 38.48 லட்சம் மனுக்களுக்கு தீர்வு

* கூட்டுறவு துறையின் மூலம் ரூ.12,359 கோடி பயிர் கடன், ரூ.4889 கோடி நகைக்கடன், ரூ.2118 கோடி சுய உதவி குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

* மாநில வளர்ச்சிக்கு கடன் பொருளாதாரம் முக்கியமானது. முன்னுரிமைத் துறைகளுக்காக ரூ.11 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு

* காவல்துறைக்கு ரூ.17,111 கோடி ஒதுக்கீடு

* விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் வறட்சி தடுப்பு பணிகள்.

* மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 41.23% பங்களிப்பு நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம்.

* 10.86 லட்சம் வங்கி கணக்குள் ஆய்வு செய்யப்பட்டு ரூ.12,078 கோடி செயலற்ற நிதிகள் கண்டறிப்பட்டன.

* பேரிடர் மேலாண்மை பணிக்கு தமிழக அரசு கூடுதலாக ரூ.9,160 கோடி ஒதுக்கீடு

* நிதிப்பகிர்பு 4.07 சதவீதமாக குறைந்ததால் ரூ.3.17 லட்சம் கோடி இழப்பு, கர்நாடகா, கேரளாவை விட தமிழ்நாட்டுக்கு நிதிப்பகிர்வு விகிதம் குறைவு

* ஜிஎஸ்டி வரிவிகித மாற்றத்தால் தமிழ்நாட்டுக்கு ரூ.9,600 கோடி இழப்பு

* நடப்பாண்டில் மட்டும் ரூ.9600 கோடி வருவாள் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

* நிதி வருவாய் பகிர்வு முறையை மாற்றி அமைக்க வேண்டும்.

* தற்போதைய நிதிக்குழுவின் வரிப்பகிர்வு குறித்த பரிந்துரை ஏமாற்றம் அளிக்கிறது.

* 0.44% அளவிலேயே தமிழகத்திற்கான நிதிப்பகிர்வு அதிகரிப்பு

* போதிய அளவு நிதியை வழங்காமல் செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்த ஓன்றிய அரசு முயற்சி.

* வரிப்பங்கு குறைப்பால் தமிழ்நாட்டுக்கு ரூ.1,202 கோடி இழப்பு

* தமிழ்நாட்டின் சொந்த வரிவருவாள் ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்து 540 கோடி

* 16-வது நிதிக்குழுவின் அறிக்கை தமிழ்நாட்டுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

* சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட செலவில் மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்கவில்லை.