#JUST IN : அகமதாபாத் டெஸ்ட் - இந்திய அணி டிக்ளேர்..!!
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி; முதல் இன்னிங்சில் இந்திய அணி 448 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது.அடுத்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங் ஆடத் துவங்கிய இந்திய அணிக்கு இளம் வீரர் துருவ் ஜுரல் மற்றும் அனுபவ வீரர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தனது சிறப்பான பேட்டிங்கைத் தொடர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரல், 210 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 125 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி மேலும் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோரை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்பிற்கு 448 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இந்திய அணி 300 ரன்கள் கூட முன்னிலை பெறாத நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.