#JUST IN : சென்னையில் மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்..!!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள, ரூ.42 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், 5மாவட்டங்களில் உள்ள 202 இடங்களில் தீவிர தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும், இந்தப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக சென்னையில் மண்டல அளவிலான ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன் விபரம்;
திருவொற்றியூர் - பாலசுப்பிரமணியம்
மணலி - குமரவேல் பாண்டியன்
மாதாவரம் - அருண் ராஜ்
தண்டையார்பேட்டை - கண்ணன்
ராயபுரம் - ஆஷா அஜித்
திருவிக நகர் - கணேசன்
அம்பத்தூர் - விவேகானந்தன்
அண்ணா நகர் - காயத்ரி கிருஷ்ணன்
தேனாம்பேட்டை - கிறிஸ்துராஜ்
கோடம்பாக்கம் - கோபால சுந்தரராஜ்
வளசரவாக்கம் - விஜய ராணி
ஆலந்துார் - வாகே சங்கேத் பல்வந்த்
அடையாறு - செந்தில் ராஜ்
பெருங்குடி - மகேஸ்வரி
சோழிங்கநல்லுார் - பாஸ்கர பாண்டியன், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.