×

#JUST IN : வரலாற்று சாதனை..! 30 மணி நேரத்தில் 15 லட்சத்தை கடந்த அண்ணாமலையின் இயக்கம்..! 

 

பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் ராஜினாமாவை பாஜ தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது. புதிய பாதை, புதிய இயக்கம், புதிய பரிமாணத்தோடு, பார்வையோடு ஆரம்பிக்க வேண்டும் என்பது என் ஆசை. தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத்தேர்தலில் நமது கட்சி போட்டியிடும்; அதில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்த அண்ணாமலை நேற்று (ஜூன் 05) இது நம்ம இயக்கம் (we the leaders) என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி இருக்கிறார்.

அண்ணாமலை தொடங்கியுள்ள இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை வேகமாக நடந்து வருகிறது. தற்போது வரை  15 லட்சத்து 05 ஆயிரம் பேர் பதிவு செய்து இணைந்துள்ளனர்.

மேலும் இந்த இயக்கத்தை விரைவில் அரசியல் கட்சியாக மாற்றுவதாகவும், வரும் பொதுத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி களம் காண்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் இந்த புது அவதாரம் தற்போது தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி பாஜக மட்டுமின்றி திமுக, அதிமுக, தவெக, சீமானின் நாம் தமிழர் என அனைத்து கட்சிகளுக்கும் பெரும் பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகி உள்ளதால் அங்குள்ள அவரது ஆதரவாளர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர். இது பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

அதேபோல் அதிமுகவை எடுத்து கொண்டால் தற்போது உள்கட்சி பிரச்சனை நிலவி வருகிறது. எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தும், முன்னாள் அமைச்சர்கள், மாஜி எம்எல்ஏக்கள் அதிமுகவில் இருந்து விலகியும் விஜய்யின் தவெகவில் இணைந்து வருகின்றனர்.

மேலும் திமுகவில் உள்ள நிர்வாகிகள் தற்போதைய சட்டசபை தேர்தல் தோல்வியால் வருத்தத்தில் உள்ளனர். விஜய்யின் வெற்றியை அவர்கள் துளியும் எதிர்பார்க்கவில்லை. இதனால் அவர்கள் நொந்துப்போய் உள்ளனர்.

அதேபோல் சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலை ஒப்பிடும்போது இந்த சட்டசபை தேர்தலில் 4 சதவீத வாக்குகளை மட்டுமேபெற்றுள்ளது. கடந்த முறையை ஒப்பிடும்போது 4 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. இதுவரை ஒவ்வொரு தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரித்து வந்த நாம் தமிழருக்கு இந்த தேர்தல் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் காரைக்குடியில் சீமான் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.