#JUST IN : கனமழை: முதல் மாவட்டமாக விடுமுறை அறிவிப்பு..!!
Updated: Nov 6, 2025, 07:50 IST
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
திருப்பத்தூரில் காலை 6 மணி முதல் மழை கொட்டித் தீர்க்கிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் விடுக்கப்பட்டதால், மற்ற மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.