#JUST IN : சூடுபிடிக்கும் தேர்தல் களம் : தேர்தல் முடிந்ததும் ராஜினாமா - செல்வப்பெருந்தகை..!
தமிழக சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தேர்தலுக்கு பின்பாக தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னதாக தலைவர் பதவி வகித்த காரணத்தால் மக்களுடன் தொடர்ந்து வைத்துக் கொள்ள முடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பிள்ளையாக இருந்த நான், இனி ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களின் பிள்ளையாக இருக்க போகிறேன் என்றார். இந்நிலையில் தற்போது தொகுதி மக்கள் தன்னை பார்க்க முடியவில்லை என்று கூறியதால் தான், ராஜினா செய்ய போவதாக சொன்னதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது வந்த தகவலின்படி, 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழ்நாடு மாநில காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட இருப்பதாகவும், செல்வப்பெருந்தகை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தலைமைக்கு அளிக்கப்பட்டதன் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பதவியை பிடிக்க மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் தீவிர முயற்சி ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் டெல்லி தலைமையின் கதவை தட்டி வருவதாக தகவல் வந்த வண்ணம் உள்ளது.