#JUST IN : தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர் தான் - வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்..!!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்தது. அதன்படி, மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அன்றைய தினம் மதியமே ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது தெரிய வரும்.
இந்நிலையில், ANS நிறுவனம் கடந்த பிப்ரவரி 7 முதல் மார்ச் 12 வரை நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:
கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 44.9% வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 38.5% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அரசியல் களத்தில் முதன்முறையாக களம் காணும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 9.7% வாக்குகளைப் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீமானின் நாம் தமிழர் கட்சி 4.8% வாக்குகளைப் பெறக்கூடும் என்றும், இதர கட்சிகள் மற்றும் நோட்டா (NOTA) ஆகியவற்றுக்கு 2.1% வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.