×

#JUST IN : பாஜகவில் இருந்து விலகினார்!

 
புதுச்சேரி சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்களின் பட்டியலைத் தலைமைப் பொறுப்பாளரும் தேசிய பொதுச்செயலருமான அருண்சிங் வெளியிட்டார்.
இம்முறை, மொத்தம் 10 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாகப் பாஜக அறிவித்திருந்த நிலையில் தற்போது ஒன்பது தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
அதில் ஊசுடுத் தொகுதியில் வென்ற பாஜக முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவுமான சாய் சரவணன் குமாருக்கு வாய்ப்புத் தரப்படவில்லை.
இதனால், அதிருப்தி அடைந்த அவர் பாஜகவில் இருந்து விலகினார். எனவே, புதுச்சேரி பாஜகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.