#JUST IN : காலையிலேயே வந்த குட் நியூஸ். !! 4வது நாளாக இன்றும் குறைந்த தங்கம் விலை..!!
தங்கம் விலை கடந்த ஒரே ஆண்டில் சுமார் 70%க்கு மேல் உயர்ந்து இருந்தது. வரலாறு காணாத லாபத்தை அள்ளி கொடுத்திருந்தது.
கடந்த 3 நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகின்றன.
நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,550க்கு விற்பனையானது. அதேபோல் சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,00,400க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி அதே விலையான ரூ.258க்கு விற்பனையானது. காலையில் விலை சரிந்ததால் தங்க நகை பிரியர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், மாலையிலும் தங்கம் விலை குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
மாலையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு பவுன் ரூ.99,840 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.1,000 சரிந்து, ஒரு கிலோ ரூ.2.57 லட்சமாக விற்பனையாகிறது. தங்கம் விலை ஒரே நாளில் ரூ.960 குறைந்து, பவுன் ஒரு லட்சத்திற்குக் கீழ் வந்தது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.
இன்று(ஜன.1) கிராமுக்கு ₹40 குறைந்து ₹12,440-க்கு விற்பனையாகிறது. சவரன் ₹320 குறைந்து ₹99,520-க்கு விற்பனையாகிறது.
புத்தாண்டின் முதல் நாளே தங்கம் விலை சரிவுடன் தொடங்கியுள்ளதால் தங்கம் வாங்க நினைத்தோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.